Posts

Showing posts from November, 2008

Sambar/Kuzhambu Podi (powder)

This is the method, my mom makes Sambar Powder, which can be used to make Vathakuzhambu, Sambar and also to give spiciness to vegetables like lady's finger etc. Ingredients: Coriander seeds - 2 cups Thuvar dhal- 1 cup Red Chillies - 4 cups if small round ones, 7 cups if it is thin long ones. Methi seeds - 1/4 cup Asafodieta Piece - 1 inch Method to make Sambar/Kuzhambu Powder: Dry Roast all the ingredients till the aroma is released. Grind them into a fine powder in flour mill. To get the same recipe in Tamil click here

Sambhar powder|Kuzhambu Podi recipe|குழம்பு பொடி

தனியா - இரண்டரை கப் துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - ஒவ்வொன்றும் அரை கப் மிளகாய் வற்றல் - (குண்டு மிளகாய் வற்றல் - நான்கு கப், ஒல்லி மிளகாய் வற்றல் ஆறு அல்லது ஏழு கப்) வெந்தயம் - கால் கப் ஜீரகம் - கால் கப் கட்டி பெருங்காயம் - சிறிதளவு எல்லா பொருட்களையும் தனி தனியாக வறுத்து நல்ல நைசாக அரிது வைத்து கொள்ளவும். இந்த பொடியை கறி, வற்றல் குழம்பு, பருப்பு குழம்பு எல்லா வற்றிற்கும் உபயோகப் படுத்தலாம்

Recipe for Rasam Powder in Tamil|ரச பொடி

இந்த முறையிலான ரசபொடி, என்னுடைய அம்மா சொல்லி குடுத்து. அவர்கள் பல வருடமாக இந்த முறையில் பொடி செய்து தயாரிக்கும் ரசம், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். தனியா - மூன்று கப் துவரம் பருப்பு - ஒன்னே முக்கால் கப் மிளகாய் வற்றல் - ஒன்றரை கப் மிளகு - ஒரு கப் சீரகம் - முக்கால் கப் பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி சிறிது மஞ்சள் பொடி (மிளகாய் வற்றல் ஒல்லியாக இருந்தால் மூன்று கப் போட்டு கொள்ளலாம்) மஞ்சள் பொடியை தவிர மாற்ற அனைத்தையும் தனி தனியாக கருகாமல் பச்சை வாசனை போக வருது எடுத்து ஒன்றாக மிக்சியில் நைசாக அரைக்கவும்.

காரட் அல்வா - மைக்ரோவேவ்

துருவிய காரட் - இரண்டு கப் பால் - ஒன்றரை கப் சர்க்கரை - ஒரு கப் வறுத்த முந்திரி - இரண்டு ஸ்பூன் நெய் - இரண்டு ஸ்பூன் காரட் பால் இரண்டையும், ஆழமான மைக்ரோவேவ் பத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி விடவும். இரண்டும் சேர்ந்து அரை பாத்திர அளவே இருக்க வேண்டும். அதனால் நல்ல ஆழமான பத்திரமாக எடுத்து கொள்ளவும். மைக்ரோ ஹையில் எட்டு நிமிடங்கள் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் ஸ்டாண்டிங் டைம் குடுத்து வெளியில் எடுக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் எட்டு நிமிடம் வைக்கவும். மூன்று நிமிடம் ஸ்டாண்டிங் டைம் குடுத்து பின்னர் அதில் நெய், முந்திரி, ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும். இதை சூடாகும் சாபிடலாம், சில் என சாபிடாலும் நன்றாக இருக்கும்.

இரண்டு பேருக்கு தேவையானவை

இன்றைய கால கட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் தனியாக இருக்கின்றனர். வெளியில் வாங்கி சாப்பிட தேவை இல்லாமல் அவர்களே சமைத்து சாப்பிட சில எளிய குறிப்புகள் கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து அளவுகளும் இருவருக்கான அளவுகள். இதை கூட்டியோ குரியிதோ உபயோக படுத்தலாம் சாதம்: இரண்டரை கப் பருப்பு - ரசம் மட்டும் வைக்க அரை கப், சாம்பார் வைப்பதாக இருந்தால் ஒன்னேகால் கப் இட்லிக்கு : மிக்சியில் அரைப்பதாக இருந்தால் ஒரு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் ஒன்றரை கப் புழுங்கல் அரிசிக்கு முக்கால் கப் குண்டு உளுத்தம் பருப்பு தோசைக்கு : இரண்டு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு இட்லி அல்லது தோசைக்கு அரைக்கும் போது உளுந்தை முதலில் அரைத்து விட்டு பின்னர் அரிசியை அரிது உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும். இட்லி தோசைக்கு சேர்த்து அரைக்க வேண்டும் எனில் மேலே கூறியுள்ள படி இட்ல்ய்க்கான அளவு போட்டு, அரிசியை நன்கு நைசாக அரைக்க வேண்டும். உளுந்து மாவு நன்கு

மாம்பழ மில்க் ஷேக்

நன்கு பழுத்த மாம்பழம் - இரண்டு (நல்ல விழுதாக அரைத்து கொள்ளவும்) பால் - ஒரு லிட்டர் (முக்கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்) சர்க்கரை - எட்டு டேபிள் ஸ்பூன் ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு பாலை நன்றாக ஆற விடவும். பாதி அளவு மாம்பழ சாறு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் அதில் பாக்கி உள்ளவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி, சில் என்று பரிமாறவும்

சப்போட்டா மில்க் ஷேக்

இரண்டு டம்ளர் மில்க் ஷேக் செய்ய தேவையானவை: சப்போட்டா நான்கு நறுக்கியது பால் அரை லிட்டர் சர்க்கரை தேவையான அளவு ஐஸ் கியூப்ஸ் ஆறு பாதி அளவு பால் எடுத்து சப்போட்டவுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். நன்கு விழுதானவுடன், மீதமிருக்கும் பால் சர்க்கரை சேர்த்து திரும்பவும் அரைக்கவும். பின்னர் அதில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பரிமாறவும்

பொடி அடைத்த என்னை கத்திரிக்காய்

தேவையானவை: சிறிய கத்தரிக்காய் - அரை கிலோ தேங்காய் துருவல் - அரை கப் துவரம் பருப்பு - 1  /2  கப் கடலை பருப்பு - 1  /2  கப்  எண்ணை - அரை கப் மிளகாய் வற்றல் - ஐந்து (இ) ஆறு உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள், பெருங்காய தூள் - சிட்டிகை தனியா - ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: தனியா, துவரம் பருப்பு, கடலை பருப்பு, தேங்காய், உப்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், பெருங்காய தூள், எல்லாவற்றையும், சிறிதளவு எண்ணை ஊற்றி நன்றாக வறுத்து நைசாக அரைத்து கொள்ளவும். கத்திரிக்கையை காம்பு அறிந்து பின்னர் அந்த பக்கம் ஒரு பாதி கீழ் பக்கம் அதற்கு நேர் எதிரில் பாதி வரை வெட்டி அதில் அரைத்து வைத்துள்ள பொடியை நன்கு அடைக்கவும். சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் கடையில் எண்ணை விட்டு தாளித்து, கத்திரிக்காய்களை பக்கத்து பக்கத்தில் அடுக்கி தகுந்த மூடி போட்டு மூடி விடவும். கத்திரிக்காய் வெந்து, சிறிதளவு சுருங்கும் போது வேறு பத்திரத்திற்கு மாற்றி விடவும். முடிந்த வரை கத்திரிக்காய் உடையாமல் பார்த்து கொள்ளவும். இது அரைத்து விட்ட வெங்காய சாம்பார், ரசம் சாதம் இவற்றிற்கு தொட்டு கொள்ள சிறந்த சைடு டிஷ்

கத்திரிக்காய் கொத்சு (வேறு முறையில்)

பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் - ஒரு கப் ஒன்றிரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப் தனியா - மூன்று ஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஆறு வெந்தயம் - கால் ஸ்பூன் மஞ்சள் தூள் - சிட்டிகை பச்சை மிளகாய் - இரண்டு (கீறியது) புளி கொட்டை பாக்களவு - நன்கு கரைத்து கொள்ளவும் சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லி உப்பு, எண்ணை - சிறிதளவு தனியா, மிளகாய், வெந்தயம் இவற்றை சேர்த்து சிறிதளவு எண்ணை ஊற்றி வறுத்து, தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரம் அல்லது கடையில் எண்ணை விட்டு, கத்திரிக்காய் லேசாக பொறித்த மாதிரி வறுத்து தனியே வைத்து கொள்ளவும். பின்னர் அந்த எண்ணையில், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் சுருள வந்தங்கும் வரை வதக்கி பின்னர் அதில் புளியை கரைத்து விட்டு, உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொடி கத்திரிக்காய் சேர்த்து ஒரே ஒரு கொதி விட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும். இது சாடத்தில் கலந்து சாப்பிடவும் சுவையாய் இருக்கும்.

கத்திரிக்காய் கொத்சு

சூடாக பொங்கலோ அல்லது இட்லியோ செய்து அதன் தலையில் உருக்கின நெய் ஊற்றி தொட்டு கொள்ள இந்த கத்திரிக்காய் கொத்சு செய்து வைத்தால் நன்கு சுவைத்து உண்பார்கள். கத்தரிக்கை பிடிகதவர்கள்/ ஒத்துகொள்ளதவர்கள், தக்காளி வெங்காயம் மட்டும் சேர்த்து கொள்ளவும். கத்திரிக்காய் (வெள்ளை கத்திரிக்காய் நல்லது) சதுர துண்டங்களாக போட்டது - ஒரு கப் பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப் பாசிபருப்பு - அரை கப் பச்சை மிளகாய் - மூன்று புளி - கொட்டை பாக்களவு உப்பு - தேவையான அளவு என்னை - இரண்டு ஸ்பூன் மஞ்சள் போடி - ஒரு சிட்டிகை பெருங்கயதுள் - ஒரு சிட்டிகை கடுகு - கால் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - இரண்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு பாசிபருப்பை குழைய வேக விடவும். கடாயில் என்னை ஊற்றி கடுகு, கிந்த மிளகாய் தாளிதி, பச்சை மிளகாய், வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும், தக்காளி, கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் சிறிதளவு வதங்கியதும், புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பின்னர் பருப்பு சேர்த்து, உப்பு சரி பார்த்த

அப்பள சமோசா

லிஜ்ஜட் பப்பட் அப்பளமாக இருந்தால் சுவையாக இருக்கும். சீராக அப்பளமோ, பூண்டு அப்பளமோ இருந்தால் அதை எடுத்து கொள்ளலாம். அப்பளம் - தேவையான அளவு உருளை கிழங்கு - பெரியது நான்கு இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப் எண்ணை - தேவையான அளவு உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உப்பு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அப்பளத்தை தண்ணீரில் முக்கி எடுத்து, அதன் மேல் கலவையில் வெய்து பிடித்த வடிவத்தில் மடித்து பொறித்து எடுத்து கொள்ளலாம். இதில் பனீர் கலவையை வெய்த்து கூட செய்யலாம்

பனீர் சமோசா Recipe in Tamil

மைதா - ஒரு கப் நெய் - ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு - சிறிதளவு என்னை - பொரிக்க தேவையான அளவு பனீர் நன்கு துருவியது - ஒரு கப் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப் உப்பு - தேவைக்கு பச்சை மிளகாய் துருவியது - ஒரு ஸ்பூன் பனீர், வெங்காயம், உப்பு, பச்சை மிளகாயை ஒன்றாக கலக்கவும். மைதாவை பிசைந்து சிறு சிறு சப்பாத்திகளாக இட்டு அதனுள் பனீர் கலவையை வெய்து முக்கோண வடிவில் மடித்து எண்ணையில் பொறித்து எடுக்கவும். சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்

Recipe to make Carrot Halwa in Tamil (காரட் அல்வா)

துருவிய காரட் - இரண்டு கப் பால் - ஒன்றரை கப் சர்க்கரை - ஒரு கப் வறுத்த முந்திரி - இரண்டு ஸ்பூன் நெய் - இரண்டு ஸ்பூன் காரட்டை பாலில் வேக வைக்கவும். அத்துடன் சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கிளறவும். சுரண்டு வரும் பொழுது, முந்திரி தூவி இறக்கவும்

சாக்லேட் ஹோம் மேட்

பால் - ஒரு லிட்டர் சண்ட காய்ச்சவும் (அல்லது) மில்க்மெய்ட் ஒரு சிறிய டின் மைதா - நன்கு சலித்து அரை கப் வெண்ணை - அரை கப் கோகோ பவுடர் - அரை கப் சர்க்கரை அல்லது சர்க்கரை மாவு - அரை கிலோ சர்க்கரையை நன்கு பொடித்து வெண்ணையுடன் கலந்து நல்ல பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். அதில், மைதா, கோகோ இரண்டையும் சேர்த்து பாலில் கொட்டி நன்கு கிளறவும். கிளர கிளர இறுகி வரும். அதை நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் podavum

மைதா அல்வா

மைதா மாவு - ஒரு கப் சர்க்கரை - ஒன்றரை கப் நெய் - அரை கப் தண்ணீர் - சிறிதளவு ஏலக்காய் - வாசனைக்கு முந்திரி - பத்து திராட்சை - பத்து மைதாவை நீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும். சர்க்கரையை கம்பி பாகு வைத்து, அதில் கரைத்த மைதாவை கொட்டி கை விடாமல் கிளறவும். ஓரத்தில் ஒட்டாமல் வந்ததும், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லை போடவும்.

Recipe for Milk Cake - மில்க் கேக்

A very simple and easy recipe to make this milk cake can be made in a hurry. தேவையானவை: மில்க்மெய்ட் - ஒரு டின் சர்க்கரை - ஒன்னேகால் கப் நெய்- நூறு கிராம் முந்திரி, பாதாம் - அலங்கரிக்க சிறிதளவு வறுத்து பொடிக்கவும் செய்முறை: மில்க்மெய்ட்ல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்று கலக்கவும். அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். சுருண்டு வரும் பொழுது, நெய்யை கொட்டி கிளறவும்,   வறுத்து பொடித்து வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து உருண்டையாக பிடிக்கலாம் அல்லது தட்டில் கொட்டி வில்லை போடலாம். சுவையான சுலபான இனிப்பு தயார்.

Summer Special Recipe Salted Spicy Butter Milk - நீர் மோர்

Being a tropical country, this is one recipe which is relished by many whenever offered. Of course if it is too hot, it is better to avoid too much spicyness of green chillies. வெயிலுக்கு உகந்த மிக சிறந்த பானம் புளிக்காத கட்டியான தயிர் ஒரு கப் தண்ணீர் மூன்று கப் இஞ்சி ஒரு சிறு தொண்டு கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு பச்சை மிளகாய் ஒன்று உப்பு - தேவையான அளவு பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை (கட்டி பெருங்காயத்தை கரைத்து ஒரு ஸ்பூன் தண்ணி எடுத்து கொள்ளலாம்) இஞ்சி முதல் பெருங்காயம் வரை எல்லா வற்றையும் சேர்த்து ஒன்றாக அரைத்து தயிரில் கலந்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். இதை பிரிட்ஜ்ல் வைக்காமலேயே குடிக்க வெயிலில் சூடு தணியும்

Recipe for Coffee Syrup - காபி சிரப்

This syrup is for my brother who loves Cold Coffee. Mix this syrup in chilled milk (3 tbsp for 1 cup milk), or use it in coffee milk shake or use it as ice cream topping. The syrup that you can get is totally based on the size of coffee filter and the quantity of filter you require. You can make this either using percolator or using filter. In the filter, add coffee powder that is needed for atleast 6 people. Pour hot water over it and get thick decoction. Take the first decoction for this syrup. Add more hot water to it and get the second decoction. You can then throw off the powder. Add the same amount of coffee powder again in the filter. Heat the first decoction (dont heat the decoction directly on fire. Heat it either in microwave or keep the decoction in a vessel and keep that vessel in boiling water). Add that decoction to the filter. You will get more stronger decoction. Now add hot water to this powder and take the second decoction. Throw off this powder too. Again ad

Recipe for Rose Syrup (ரோஸ் சிரப்)

Not just kids every one loves Rose Milk. It is very easy to make Rose syrup at home. The following is the recipe for Rose Syrup in Tamil. இந்த சிரப் செய்வது சுலபம். இதை ஒரு பங்கு எடுத்து கொண்டு, மூன்று பங்கு பாலுடன் கலந்து குடிக்க நன்றாக இருக்கும். தேவியனவை: பன்னீர் ரோஜா இதழ்கள் - ஒரு கப் முந்திரி - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் தண்ணீர் - இரண்டு கப் பன்னீர் - ஒரு துளி அரைக்க ரோஸ் கலர் - சிறிதளவு சிட்ரிக் ஆசிட் - இரண்டு சிட்டிகை ரோஜா இதழ்களை முந்திரி, பன்னீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் சிட்ரிக் ஆசிட் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். கம்பி பாகு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி கலர் சேர்க்கவும். நன்கு சுத்தமான கிந்த பாட்டில் ஊற்றி ஆற விடவும். பிரிட்ஜ்ல் வைத்து உபயோக படுத்தவும். தேவையான பொழுது மேல் கண்ட முறையில் பாலுடன் கலந்து குடிக்கலாம். விருந்தாளிகளுக்கு பரிமாறும் பொழுது அதில் மேலே சிறிதளவு முந்திரி பொடித்து போட்டு பரிமாறலாம்.

Recipe for Mango Rice (மாங்காய் சாதம்) in Tamil

நல்ல புளிப்பான மாங்காய் (கிளி மூக்கு மாங்காய் சிறந்தது) - ஒன்று துருவியது நன்கு உதிரியை வடித்த சாதம் (பாஸ்மதி அரிசியை இருந்தால் சுவை கூடுதலாய் இருக்கும். தாளிக்க - கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய் (பொடியாய் நறுக்கியது), ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், எட்டு ஸ்பூன் நெய். மாங்காயை தூள் சீவி துருவி கொள்ளவும். வானெலியில் நெய்யையும், நல்லெண்ணையும், சேர்த்து, கடுகு, பெருங்காயத்தை தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து, மாங்காய் துருவலையும் போட்டு, நீர் சண்ட வதக்கி கொள்ளவும். மங்கை அளவிற்கேற்ப உப்பு சேர்க்கவும். நன்றாக சூடு ஆறியதும் சாதத்துடன் சேர்த்து கலக்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்

How to make Mango Halwa (மாம்பழ அல்வா)?

நல்ல இனிப்பான மாம்பழ சாறு ஒரு கப் சர்க்கரை கால் கப் தேன் இரண்டு டேபிள் ஸ்பூன் சுக்கு போடி - ஒரு சிட்டிகை பாதாம் பருப்பு - பத்து முதல் பன்னிரண்டு (அலங்கரிக்க) ஊற வைத்து தோல் உரித்து இரண்டாக உடைத்து வைத்து கொள்ளவும் பாதாம் பருப்பு தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் ஏற்றி, கை விடாமல் கிளறவும். நன்றாக அல்வா பதம் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது பாதாம் பருப்பை சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

Pongal - A recipe made out of Sugar

Image
A sweet recipe made of rice and moong dal. Similar to Sarkarai Pongal but made out of sugar instead of Jaggery. சர்க்கரை பொங்கலை போலவே மிகவும் இனிமையான ஒன்று. சிலர் பொங்கல் அன்றும் சிலர் அதற்கு அடுத்த நாளும் இதை செய்வார்கள். குறிப்பாக, கனு வைக்கும் அன்று, இதை செய்வது மிகவும் விசேஷம். பால் - அரை லிட்டெர் பச்சை அரிசி - அரை ஆழாக்கு பயத்தம் பருப்பு - கால் aazhakku சர்க்கரை - ஒரு ஆழாக்கு ஏலக்காய் முந்திரி நெய் அரை கப் செய்முறை: அரிசி மற்றும் பயத்தம் பருப்பை நன்றாக கழுவி, குழைய வேக வெய்து கொள்ள வேண்டும். பாலை நன்றாக காய்ச்சி அதை அரிசியுடன் சேர்த்து கலந்து விடவும். எல்லாம் நன்றாக கலந்து வரும் போது அதை இறக்கி, நெய்யில் முந்திரி வறுத்து போட்டு ஏலக்காய் சேர்த்து கலக்கி விடவும். For the english version of Pongal using Sugar

Kitchen tips in Tamil (சமையல் குறிப்புகள்)

உப்பை குறைக்க: குழம்பு மற்றும் ரசத்தில் உப்பு அதிகமானால், அதில் உருளை கிழங்கை வேக விட்டு துண்டு செய்து போட்டால் அதிகப்படி உப்பை கிழங்கு எழுத்து கொள்ளும். எலுமிச்சம் பழம் சடம் கிளரும்போதோ எலுமிச்சை ரசம் செய்யும் போதோ, சூடு இருக்கும் போது சேர்க்க கூடாது. ரசத்திற்கு இறக்கியவுடனும் சாதத்திற்கு அடுப்பை அணைத்தவுடனும் சேர்க்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்த்து செய்யும் மேல் கண்ட உணவு வகைகளுக்கு வரமிளகாய் சேர்க்காமல் பச்சை மிளகாய் சேர்த்தல் ருசி கூடுதலாக இருக்கும். காபி பில்டரில் டிகாக்சன் சரியாக இறங்காமல் இருக்கும்; அதற்கு காரணம் பில்டரில் இருக்கும் ஓட்டை அடைத்து கொண்டிருக்கும். அதை சரி செய்ய, வெறும் பில்டரில் சிறிதளவு வென்னீர் ஊற்றி வடிய விட்டு பின்னர் அடுப்பில் காட்டினால், ஓட்டையில் அடைத்து கொண்டிருக்கும் பொடியோ, அழுக்கோ உதிர்ந்து விடும். இதை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்யவேண்டும். காய்கறிகளை வேக விடும் பொழுது உப்பு போட்டே வேக விட வேண்டும்; இல்லாவிட்டால் காய்களில் உப்பு பிடிக்காது. கிழங்கு வகைகளை உப்பு போடாமல் தான் வேக விட வேண்டும்.

Recipe for Badam Cake (பாதாம் கேக்) in Tamil

இந்த முறை தீபாவளிக்கு வழக்கமான ச்வீட்டன mysoorepak இல்லாமல் வேறு எதாவது செய்யலாம் என யோசித்த பொழுது பாதாம் கேக் செய்யலாம் என தோணி அதற்கு தேவையான சாமான்களையும் வாங்கி வந்தேன். பாதமை ஊறவைத்து தூள் உரித்த அப்பறம் தான் நான் செய்ய நினைத்திருக்கும் முறை சரியா என சந்தேகம். அதனால் உடனே என்னுடய ஒர்படிக்கு போன் செய்தேன். அவர் சொல்லி குடுத்த முறையில் செய்து பார்த்தேன். நானே எதிர்பார்க்காத அளவிற்கு நன்றாக வந்தது. தேவையானவை: பாதாம் - ஊற வைத்து தோல் உரித்தது 300 கிராம் முந்திரி - நூறு கிராம் (ஊற வைக்கவும்) தண்ணீர் - ஒரு கப் செய்முறை: முந்திரி பாதாம் இரண்டையும் நன்றாக மையாக அரிது கொள்ளவும். அரைத்த விழுதை அளந்து கொள்ளவும். ஒரு கப் விழுதிற்கு முக்கால் கப் சர்க்கரை எடுத்து கொள்ளவும். சர்க்கரையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கம்பி பாகு பதம் வந்ததும், அரைத்த விழுதை சேர்த்து கை எடுக்காமல் கிளறவும். அந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறவும். அடுப்பை அனைத்து அந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும். மைசூர் பாகு, தேங்காய் பர்பி ப