கத்திரிக்காய் கொத்சு

சூடாக பொங்கலோ அல்லது இட்லியோ செய்து அதன் தலையில் உருக்கின நெய் ஊற்றி தொட்டு கொள்ள இந்த கத்திரிக்காய் கொத்சு செய்து வைத்தால் நன்கு சுவைத்து உண்பார்கள். கத்தரிக்கை பிடிகதவர்கள்/ ஒத்துகொள்ளதவர்கள், தக்காளி வெங்காயம் மட்டும் சேர்த்து கொள்ளவும்.

கத்திரிக்காய்
(வெள்ளை கத்திரிக்காய் நல்லது) சதுர துண்டங்களாக போட்டது - ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பாசிபருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - மூன்று
புளி - கொட்டை பாக்களவு
உப்பு - தேவையான அளவு
என்னை - இரண்டு ஸ்பூன்
மஞ்சள் போடி - ஒரு சிட்டிகை
பெருங்கயதுள் - ஒரு சிட்டிகை
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

பாசிபருப்பை குழைய வேக விடவும். கடாயில் என்னை ஊற்றி கடுகு, கிந்த மிளகாய் தாளிதி, பச்சை மிளகாய், வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும், தக்காளி, கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் சிறிதளவு வதங்கியதும், புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பின்னர் பருப்பு சேர்த்து, உப்பு சரி பார்த்து, தேவையானால் இன்னும் சிறிதளவு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

No comments: