காரட் அல்வா - மைக்ரோவேவ்

துருவிய காரட் - இரண்டு கப்
பால் - ஒன்றரை கப்
சர்க்கரை - ஒரு கப்
வறுத்த முந்திரி - இரண்டு ஸ்பூன்
நெய் - இரண்டு ஸ்பூன்

காரட் பால் இரண்டையும், ஆழமான மைக்ரோவேவ் பத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி விடவும். இரண்டும் சேர்ந்து அரை பாத்திர அளவே இருக்க வேண்டும். அதனால் நல்ல ஆழமான பத்திரமாக எடுத்து கொள்ளவும். மைக்ரோ ஹையில் எட்டு நிமிடங்கள் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் ஸ்டாண்டிங் டைம் குடுத்து வெளியில் எடுக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் எட்டு நிமிடம் வைக்கவும். மூன்று நிமிடம் ஸ்டாண்டிங் டைம் குடுத்து பின்னர் அதில் நெய், முந்திரி, ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும்.

இதை சூடாகும் சாபிடலாம், சில் என சாபிடாலும் நன்றாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

Recipe for Carrot Burfi

How to make Tamarind Paste at home

Bengal gram flour Payasam|Mysore pa Kheer