Posts

Showing posts from November, 2016

காரட் சாலட்

தேவையான பொருட்கள்   காரட் - 4 (தோல் சீவி துருவி வைக்கவும்) பாசிப்பருப்பு - 1 / 4 கப் (1 /2 மணி நேரம்  ஊற வைக்கவும்) உப்பு தேவையான அளவு பச்சை மிளகாய் - 2 (கீறிக் கொள்ளவும்)  கொத்துமல்லி தழை - 1 /4 கப் (பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை - சிறிதளவு எலுமிச்சம் பழம் - 1  (சாறு எடுத்து வைக்கவும்) எண்ணை - 1 தே க  கடுகு சிறிதளவு உடைத்த உளுத்தம் பருப்பு - சிறிதளவு  பெருங்காய் தூள் - சிறிதளவு  செய்முறை : ஒரு அகலமான பாத்திரத்தில், துருவிய காரட், ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு, கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.  தாளிக்கும் கரண்டியில் எண்ணையை சூடு பண்ணவும், சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காய தூள் சேர்த்து காரட்டின் மீது தாளிக்கவும். சுவையான சாதனா காரட் சாலட் தயார். இதை தனியாகவும் சாப்பிடலாம், தயிர் சேர்த்தும் சாப்பிடலாம். டியட்ல் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு. 

வெஞ்சனம் செய்முறை - Recipe for Venjanam in Tamil

இது ஒரு பரம்பரையாகக் கிடைத்த உணவுப் பதார்த்தம் ஆகும். ரெண்டு பேருக்கு தேவையான அளவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: புளி - ஒரு எலுமிச்சை பழம் அளவு மிளகாய் வற்றல் - 10 முதல் 12 வரை (காரத்திற்கேற்ப) தனியா - 2 ஸ்பூன் கடலை பருப்பு - 1 ஸ்பூன் மிளகு - 1/4 ஸ்பூன் ஜீரகம் - 1 ஸ்பூன் துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு or தட்டை பருப்பு - 1/2 ஆழாக்கு (இதனை அவரை பருப்பு என்றும் அழைப்பர் ) தேங்காய் - 1 நன்கு துருவி சின்ன வெங்காயம் - 1/4 கிலோ பெரிய வெங்காயம் - 2 கத்திரிக்காய் - 1/4 to 1/2 கிலோ (வாழைக்காய், கொத்தவரை, அவரை போன்ற காய்களும் பயன்படுத்தலாம்) செய்முறை: வறுக்குதல்: தனியா, கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், ஜீரகம் ஆகியவற்றை தனித் தனியாக நல்லெண்ணையில் வறுக்கவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி வறுத்து வறுத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து, துருவிய தேங்கையுடனும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைப்பது நைசாக இல்லாமல், நற நற என்று இருக்க வேண்டும். துவரம் பருப்பு: துவரம் பருப்பை நன்கு குழைய வேக விடவும். சின்ன வெங்காயம்: சின்ன வெங்காயத்தை நல்லெண்ணையில் வதக்கி கொள்ளவும். புளி மற்றும் காய்கற

அரிசி தேங்காய் பால் கஞ்சி

தேவையானவை பச்சரிசி - 1  டம்ளர்  வெந்தயம் - 1  ஸ்பூன்  பூண்டு - 4  பல் தேங்காய் பால் - 1  கப் உப்பு தேவைக்கு ஏற்ப செய்முறை: அரிசியை நொய்யாக உடைத்து 1  டம்பளர்க்கு 3  டம்பளர் தண்ணீர், வெந்தயம், பூண்டு, உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும். நன்றாக 3 விசில் வர வேண்டும். குக்கரை திறந்த பின் வெந்த அரிசியுடன் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். சுவையான சத்தான தேங்காய் பால் கஞ்சி தயார்.  காலை சிற்றுண்டிக்கு ஏற்ற சந்தன உணவு. உடல் நிலை சரி இல்லாதவர்கள் தேங்காய் பாலை சேர்க்காமல் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. கர்பிணி பெண்களும், குழந்தை பெற்ற தாய் மார்களுக்கும் எளிதாக ஜீரணிக்க கூடிய உணவு. பசியின்மையை போக்கி விடும். 

அஞ்சறை பெட்டி

ஒவ்வொரு சமையல் அறையிலும் முக்கியமாக இடம் பெரும் ஒரு பாத்திரம் அஞ்சறை பெட்டி. வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும் இதன் பெயர் தான் அஞ்சறை பெட்டி அனால் இதில் 6 அல்லது 7 சிறிய கிண்ணங்கள் இருக்கும். அந்த கிண்ணங்களின் அளவிற்கு அழகாக, அளவாக ஒரு சின்ன ஸ்பூன் உண்டு.  இதில் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, ஜீரகம், கட்டி பெருங்காயம், மஞ்சள் பொடி, தனியா, போன்றவற்றை போட்டு வைக்கலாம். இதற்கு ஒரு மேல் மூடி உண்டு அதில் மிளகாய் வற்றல் வைத்து கொள்ளலாம்.

உடனடி மாங்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்  மாங்காய் - 1  பச்சை மிளகாய் - 2  பெருங்காய பொடி - 1 /2   tsp உப்பு  - தேவையான அளவு செய்முறை  மாங்காயை தோலி சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். உப்பு, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காய பொடி அனைத்தையும் ஒன்றாக அரைக்கவும். மாங்காயில் இந்த அரைத்த விழதை கலந்து ஒரு பத்து நிமிடங்கள் ஊற விட்டு உடனடியாக பரிமாறவும்.