Showing posts with label Milk based. Show all posts
Showing posts with label Milk based. Show all posts

Thursday, November 13, 2008

மாம்பழ மில்க் ஷேக்

நன்கு பழுத்த மாம்பழம் - இரண்டு (நல்ல விழுதாக அரைத்து கொள்ளவும்)
பால் - ஒரு லிட்டர் (முக்கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்)
சர்க்கரை - எட்டு டேபிள் ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு

பாலை நன்றாக ஆற விடவும். பாதி அளவு மாம்பழ சாறு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் அதில் பாக்கி உள்ளவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி, சில் என்று பரிமாறவும்

சப்போட்டா மில்க் ஷேக்

இரண்டு டம்ளர் மில்க் ஷேக் செய்ய தேவையானவை:

சப்போட்டா நான்கு நறுக்கியது
பால் அரை லிட்டர்
சர்க்கரை தேவையான அளவு
ஐஸ் கியூப்ஸ் ஆறு

பாதி அளவு பால் எடுத்து சப்போட்டவுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். நன்கு விழுதானவுடன், மீதமிருக்கும் பால் சர்க்கரை சேர்த்து திரும்பவும் அரைக்கவும். பின்னர் அதில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பரிமாறவும்

Wednesday, November 12, 2008

Recipe for Milk Cake - மில்க் கேக்

A very simple and easy recipe to make this milk cake can be made in a hurry.

தேவையானவை:
மில்க்மெய்ட் - ஒரு டின்
சர்க்கரை - ஒன்னேகால் கப்
நெய்- நூறு கிராம்
முந்திரி, பாதாம் - அலங்கரிக்க சிறிதளவு வறுத்து பொடிக்கவும்

செய்முறை: மில்க்மெய்ட்ல் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்று கலக்கவும். அத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். சுருண்டு வரும் பொழுது,நெய்யை கொட்டி கிளறவும்,  வறுத்து பொடித்து வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து உருண்டையாக பிடிக்கலாம் அல்லது தட்டில் கொட்டி வில்லை போடலாம். சுவையான சுலபான இனிப்பு தயார்.

Thursday, November 6, 2008

Pongal - A recipe made out of Sugar




A sweet recipe made of rice and moong dal. Similar to Sarkarai Pongal but made out of sugar instead of Jaggery.

சர்க்கரை பொங்கலை போலவே மிகவும் இனிமையான ஒன்று. சிலர் பொங்கல் அன்றும் சிலர் அதற்கு அடுத்த நாளும் இதை செய்வார்கள். குறிப்பாக, கனு வைக்கும் அன்று, இதை செய்வது மிகவும் விசேஷம்.

பால் - அரை லிட்டெர்
பச்சை அரிசி - அரை ஆழாக்கு
பயத்தம் பருப்பு - கால் aazhakku
சர்க்கரை - ஒரு ஆழாக்கு
ஏலக்காய்
முந்திரி
நெய் அரை கப்

செய்முறை:
அரிசி மற்றும் பயத்தம் பருப்பை நன்றாக கழுவி, குழைய வேக வெய்து கொள்ள வேண்டும். பாலை நன்றாக காய்ச்சி அதை அரிசியுடன் சேர்த்து கலந்து விடவும். எல்லாம் நன்றாக கலந்து வரும் போது அதை இறக்கி, நெய்யில் முந்திரி வறுத்து போட்டு ஏலக்காய் சேர்த்து கலக்கி விடவும்.

For the english version of Pongal using Sugar

Popular Posts

Featured Post

Manathakkali Vathal Pathiya Kuzhambu