Showing posts with label Brinjal. Show all posts
Showing posts with label Brinjal. Show all posts

Tuesday, February 24, 2009

Sindhi Brinjal Sabji

Ingredients:
Brinjal - 1 Kg (cut lengthwise)
Coriander leaves - 2 bunch
Oil - 2 tbspn
Urad dal - 4 tbspn
Green Chillies - as per the brinjal quantity

Method:
In a kadai, take oil and add mustard seeds and when it splatters, add the urud dal and a pinch of asafodeita. Add the cut brinjals and let it cook. Grind the coriander leaves and chilly together and add it to the brinjal. Let it cook and when the oil comes off, remove from fire. (Pachai vaasani poi irukkanum).

You can have this dish with rice, paratha, roti and curd rice.

Wednesday, February 18, 2009

Rasavaangi - Brinjal

Ingredients:
Thuvar Dal - 1 cup (Pressure cook and mash)
Brinjal - 1/2 kg
Tamrind - 1 small lemon size ball
Turmeric powder - a pinch
Oil - 1 tbspn
Ghee - 2 tbspn
Salt - To taste
Dhaniya - 1/4 cup
Gram Dhal - 1/4 cup
Red chilly - 8
Grated Coconut - 1/2 cup

Method:
Fry Dhaniya, Gram dhal, Red chilly and coconut in oil. Grind them into fine paste.

Cut Brinjals into small pieces. Soak tamrind in water and extract the paste. In a vessel add salt, turmeric powder and tamrind extract and add brinjals to it and let it boil. When the tamrind smell goes off, add the grind paste to it and boil it again.

Season it with mustard seeds, urad dal, and curry leaves in ghee. This can be had with rice, Pongal or with Idly.

Thursday, November 13, 2008

பொடி அடைத்த என்னை கத்திரிக்காய்

தேவையானவை:
சிறிய கத்தரிக்காய் - அரை கிலோ
தேங்காய் துருவல் - அரை கப்
துவரம் பருப்பு - 1 /2  கப்
கடலை பருப்பு - 1 /2 கப் 
எண்ணை - அரை கப்
மிளகாய் வற்றல் - ஐந்து (இ) ஆறு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள், பெருங்காய தூள் - சிட்டிகை
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:
தனியா, துவரம் பருப்பு, கடலை பருப்பு, தேங்காய், உப்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், பெருங்காய தூள், எல்லாவற்றையும், சிறிதளவு எண்ணை ஊற்றி நன்றாக வறுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

கத்திரிக்கையை காம்பு அறிந்து பின்னர் அந்த பக்கம் ஒரு பாதி கீழ் பக்கம் அதற்கு நேர் எதிரில் பாதி வரை வெட்டி அதில் அரைத்து வைத்துள்ள பொடியை நன்கு அடைக்கவும். சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் கடையில் எண்ணை விட்டு தாளித்து, கத்திரிக்காய்களை பக்கத்து பக்கத்தில் அடுக்கி தகுந்த மூடி போட்டு மூடி விடவும். கத்திரிக்காய் வெந்து, சிறிதளவு சுருங்கும் போது வேறு பத்திரத்திற்கு மாற்றி விடவும். முடிந்த வரை கத்திரிக்காய் உடையாமல் பார்த்து கொள்ளவும்.

இது அரைத்து விட்ட வெங்காய சாம்பார், ரசம் சாதம் இவற்றிற்கு தொட்டு கொள்ள சிறந்த சைடு டிஷ்

கத்திரிக்காய் கொத்சு (வேறு முறையில்)

பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் - ஒரு கப்
ஒன்றிரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
தனியா - மூன்று ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஆறு
வெந்தயம் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை
பச்சை மிளகாய் - இரண்டு (கீறியது)
புளி கொட்டை பாக்களவு - நன்கு கரைத்து கொள்ளவும்
சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லி
உப்பு, எண்ணை - சிறிதளவு

தனியா, மிளகாய், வெந்தயம் இவற்றை சேர்த்து சிறிதளவு எண்ணை ஊற்றி வறுத்து, தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும்.

அடி கனமான பாத்திரம் அல்லது கடையில் எண்ணை விட்டு, கத்திரிக்காய் லேசாக பொறித்த மாதிரி வறுத்து தனியே வைத்து கொள்ளவும். பின்னர் அந்த எண்ணையில், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் சுருள வந்தங்கும் வரை வதக்கி பின்னர் அதில் புளியை கரைத்து விட்டு, உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொடி கத்திரிக்காய் சேர்த்து ஒரே ஒரு கொதி விட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.

இது சாடத்தில் கலந்து சாப்பிடவும் சுவையாய் இருக்கும்.

கத்திரிக்காய் கொத்சு

சூடாக பொங்கலோ அல்லது இட்லியோ செய்து அதன் தலையில் உருக்கின நெய் ஊற்றி தொட்டு கொள்ள இந்த கத்திரிக்காய் கொத்சு செய்து வைத்தால் நன்கு சுவைத்து உண்பார்கள். கத்தரிக்கை பிடிகதவர்கள்/ ஒத்துகொள்ளதவர்கள், தக்காளி வெங்காயம் மட்டும் சேர்த்து கொள்ளவும்.

கத்திரிக்காய்
(வெள்ளை கத்திரிக்காய் நல்லது) சதுர துண்டங்களாக போட்டது - ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
பாசிபருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - மூன்று
புளி - கொட்டை பாக்களவு
உப்பு - தேவையான அளவு
என்னை - இரண்டு ஸ்பூன்
மஞ்சள் போடி - ஒரு சிட்டிகை
பெருங்கயதுள் - ஒரு சிட்டிகை
கடுகு - கால் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

பாசிபருப்பை குழைய வேக விடவும். கடாயில் என்னை ஊற்றி கடுகு, கிந்த மிளகாய் தாளிதி, பச்சை மிளகாய், வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும், தக்காளி, கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காய் சிறிதளவு வதங்கியதும், புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பின்னர் பருப்பு சேர்த்து, உப்பு சரி பார்த்து, தேவையானால் இன்னும் சிறிதளவு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

Popular Posts

Featured Post

Manathakkali Vathal Pathiya Kuzhambu