Thursday, November 13, 2008

பொடி அடைத்த என்னை கத்திரிக்காய்

தேவையானவை:
சிறிய கத்தரிக்காய் - அரை கிலோ
தேங்காய் துருவல் - அரை கப்
துவரம் பருப்பு - 1 /2  கப்
கடலை பருப்பு - 1 /2 கப் 
எண்ணை - அரை கப்
மிளகாய் வற்றல் - ஐந்து (இ) ஆறு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள், பெருங்காய தூள் - சிட்டிகை
தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:
தனியா, துவரம் பருப்பு, கடலை பருப்பு, தேங்காய், உப்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், பெருங்காய தூள், எல்லாவற்றையும், சிறிதளவு எண்ணை ஊற்றி நன்றாக வறுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

கத்திரிக்கையை காம்பு அறிந்து பின்னர் அந்த பக்கம் ஒரு பாதி கீழ் பக்கம் அதற்கு நேர் எதிரில் பாதி வரை வெட்டி அதில் அரைத்து வைத்துள்ள பொடியை நன்கு அடைக்கவும். சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் கடையில் எண்ணை விட்டு தாளித்து, கத்திரிக்காய்களை பக்கத்து பக்கத்தில் அடுக்கி தகுந்த மூடி போட்டு மூடி விடவும். கத்திரிக்காய் வெந்து, சிறிதளவு சுருங்கும் போது வேறு பத்திரத்திற்கு மாற்றி விடவும். முடிந்த வரை கத்திரிக்காய் உடையாமல் பார்த்து கொள்ளவும்.

இது அரைத்து விட்ட வெங்காய சாம்பார், ரசம் சாதம் இவற்றிற்கு தொட்டு கொள்ள சிறந்த சைடு டிஷ்

No comments:

Popular Posts

Featured Post

Manathakkali Vathal Pathiya Kuzhambu