சர்க்கரை பொங்கலை போலவே மிகவும் இனிமையான ஒன்று. சிலர் பொங்கல் அன்றும் சிலர் அதற்கு அடுத்த நாளும் இதை செய்வார்கள். குறிப்பாக, கனு வைக்கும் அன்று, இதை செய்வது மிகவும் விசேஷம். தேவையானவ: பால் - அரை லிட்டெர் பச்சை அரிசி - அரை ஆழாக்கு பயத்தம் பருப்பு - கால் aazhakku சர்க்கரை - ஒரு ஆழாக்கு ஏலக்காய் முந்திரி நெய் அரை கப் செய்முறை: அரிசி மற்றும் பயத்தம் பருப்பை நன்றாக கழுவி, குழைய வேக வெய்து கொள்ள வேண்டும். பாலை நன்றாக காய்ச்சி அதை அரிசியுடன் சேர்த்து கலந்து விடவும். எல்லாம் நன்றாக கலந்து வரும் போது அதை இறக்கி, நெய்யில் முந்திரி வறுத்து போட்டு ஏலக்காய் சேர்த்து கலக்கி விடவும். |
Tamil Recipes >