இந்த சிரப் செய்வது சுலபம். இதை ஒரு பங்கு எடுத்து கொண்டு, மூன்று பங்கு பாலுடன் கலந்து குடிக்க நன்றாக இருக்கும். தேவியனவை: பன்னீர் ரோஜா இதழ்கள் - ஒரு கப் முந்திரி - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் தண்ணீர் - இரண்டு கப் பன்னீர் - ஒரு துளி அரைக்க ரோஸ் கலர் - சிறிதளவு சிட்ரிக் ஆசிட் - இரண்டு சிட்டிகை செய்முறை: ரோஜா இதழ்களை முந்திரி, பன்னீர் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் சிட்ரிக் ஆசிட் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். கம்பி பாகு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி கலர் சேர்க்கவும். நன்கு சுத்தமான பாட்டில் ஊற்றி ஆற விடவும். பிரிட்ஜ்ல் வைத்து உபயோக படுத்தவும். தேவையான பொழுது மேல் கண்ட முறையில் பாலுடன் கலந்து குடிக்கலாம். விருந்தாளிகளுக்கு பரிமாறும் பொழுது அதில் மேலே சிறிதளவு முந்திரி பொடித்து போட்டு பரிமாறலாம். |
Tamil Recipes >