இந்த சிரப்பை குளிர்ந்த பாலில் (இரண்டு முதல் மூன்று டேபிள் ஸ்பூன் ஒரு டம்பளர் பாலிற்கு) கலந்து குடிக்கலாம். இது மில்க் ஷேக் செய்ய மற்றும் ஐஸ் கிரீம் டாப்பிங் செய்யவும் உபயோக படுத்தலாம். கிடைக்கும் சிரப் உங்களுடைய காபி பில்டர் அளவை பொருத்தும், உங்களுக்கு தேவையான சிரப்பை பொருத்தும் கிடைக்கும். ஆறு பேருக்கு தேவையான அளவு காபி பொடியை பில்டரில் போட்டு ஒரு முறை டிகாக்சன் இறக்கவும். அந்த பொடியை தூக்கி போட்டு விடவும். பின்னர் அதே அளவு காபி பொடி எடுத்து அதில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதில், முதலில் எடுத்த காபி டிகாக்சனை ஊற்றவும். இப்பொழுது டபுள் ஸ்ட்ராங் டிகாக்சன் கிடைக்கும். இன்னும் ஒரு தரம் இதே முறையில் டிகாக்சன் இறக்கவும். டிகாக்சனை அளந்து அதற்கு பாதி அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். (ஐந்து கப் டிகாக்சன் இருந்தால் இரண்டரை கப் சர்க்கரை சேர்க்கவும்). இந்த சிரப்பை பிரிட்ஜ்ல் வைத்து நீண்ட நாள் உபயோக படுத்தலாம். For the recipe in English |
Tamil Recipes >