தேவையானது: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் - ஒரு கப் ஒன்றிரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப் தனியா - மூன்று ஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஆறு வெந்தயம் - கால் ஸ்பூன் மஞ்சள் தூள் - சிட்டிகை பச்சை மிளகாய் - இரண்டு (கீறியது) புளி கொட்டை பாக்களவு - நன்கு கரைத்து கொள்ளவும் சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லி உப்பு, எண்ணை - சிறிதளவு செய்முறை: தனியா, மிளகாய், வெந்தயம் இவற்றை சேர்த்து சிறிதளவு எண்ணை ஊற்றி வறுத்து, தண்ணீர் விடாமல் நைசாக அரைத்து வைத்து கொள்ளவும். அடி கனமான பாத்திரம் அல்லது கடையில் எண்ணை விட்டு, கத்திரிக்காய் லேசாக பொறித்த மாதிரி வறுத்து தனியே வைத்து கொள்ளவும். பின்னர் அந்த எண்ணையில், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் சுருள வந்தங்கும் வரை வதக்கி பின்னர் அதில் புளியை கரைத்து விட்டு, உப்பு, பொடித்து வைத்திருக்கும் பொடி கத்திரிக்காய் சேர்த்து ஒரே ஒரு கொதி விட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும். இது சாதத்தில் கலந்து சாப்பிடவும் சுவையாய் இருக்கும். |
Tamil Recipes >