இந்த முறை தீபாவளிக்கு வழக்கமான ச்வீட்டன mysoorepakஇல்லாமல் வேறு எதாவது செய்யலாம் என யோசித்த பொழுது பாதாம் கேக் செய்யலாம் என தோணி அதற்கு தேவையான சாமான்களையும் வாங்கி வந்தேன். பாதமை ஊறவைத்து தூள் உரித்த அப்பறம் தான் நான் செய்ய நினைத்திருக்கும் முறை சரியா என சந்தேகம். அதனால் உடனே என்னுடய ஒர்படிக்கு போன் செய்தேன். அவர் சொல்லி குடுத்த முறையில் செய்து பார்த்தேன். நானே எதிர்பார்க்காத அளவிற்கு நன்றாக வந்தது. தேவையானவை: பாதாம் - ஊற வைத்து தோல் உரித்தது 300 கிராம் முந்திரி - நூறு கிராம் (ஊற வைக்கவும்) தண்ணீர் - ஒரு கப் செய்முறை: முந்திரி பாதாம் இரண்டையும் நன்றாக மையாக அரிது கொள்ளவும். அரைத்த விழுதை அளந்து கொள்ளவும். ஒரு கப் விழுதிற்கு முக்கால் கப் சர்க்கரை எடுத்து கொள்ளவும். சர்க்கரையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கம்பி பாகு பதம் வந்ததும், அரைத்த விழுதை சேர்த்து கை எடுக்காமல் கிளறவும். அந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறவும். அடுப்பை அனைத்து அந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும். மைசூர் பாகு, தேங்காய் பர்பி போல் சூடாக இருக்கும் போது வில்லை போட வரவில்லை. சிறிதளவு ஆறின பிறகு வில்லை போட வந்தது. சுவை அபாரம். |
Tamil Recipes >