ஒவ்வொரு சமையல் அறையிலும் முக்கியமாக இடம் பெரும் ஒரு பாத்திரம் அஞ்சறை பெட்டி. வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும் இதன் பெயர் தான் அஞ்சறை பெட்டி அனால் இதில் 6 அல்லது 7 சிறிய கிண்ணங்கள் இருக்கும். அந்த கிண்ணங்களின் அளவிற்கு அழகாக, அளவாக ஒரு சின்ன ஸ்பூன் உண்டு. இதில் கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, ஜீரகம், கட்டி பெருங்காயம், மஞ்சள் பொடி, தனியா, போன்றவற்றை போட்டு வைக்கலாம். இதற்கு ஒரு மேல் மூடி உண்டு அதில் மிளகாய் வற்றல் வைத்து கொள்ளலாம். |
Tamil Recipes >