Find here recipes in Tamil. A few of them are translated by Mallika Iyer and few are done by RajmiArun.
|
Tamil Recipes
சீரான உடம்பிற்கு தேவையான சீரக பொடி செய்வது எப்படி?
உள் உடம்பை பாதுகாக்க இந்த பொடியை கைவசம் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதை செய்வது மிகவும் எளிது. எவ்வளவு பொடி தேவையோ அந்த அளவு அல்லது குறைந்தது ஒரு 100 கிராமாவது சீரகத்தை வாங்கி வெய்யிலில் காய வைத்து எண்ணை விடாமல் வாசனை வரும் வரை வறுத்து ஆறியவுடன் மிக்சியில் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். சப்பாத்திக்கு செய்யும் எல்லா சைடு டிஷ்களிலும் சீரக பொடி சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கூடும். லஸ்ஸி, நீர் மோர் வகைகளுக்கும் ஏற்றது. சாட் வகைகளில் சேர்க்கப்படும் ஸ்வீட் சட்னிகளில் நிச்சயம் இதை சேர்க்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாகிவிடும். |
வெருசெனேக பொடி (வேர்கடலை கொப்பரை பொடி)
ஆந்திராவிலிருந்து நம்மூருக்கு வந்திருக்கும் அருமையான பொடி இது. இதற்கு தேவையான பொருட்கள்: வேர்க்கடலை - ௨ கப் ஜீரகம் - ௨ டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 8 கொப்பரை - அரை மூடி (உலர்ந்த தேங்காய்) பூண்டு பல் - 15 நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப செய்முறை : முதலில் வேர்க்கடலையை எண்ணையில்லாமல் வறுக்கவும். சிறிது ஆறியவுடன் கைகளின் நடுவில் வைத்து தேய்த்தால் வேர்க்கடலையின் மேல் தோல் தனியாக வரும், அதை நீக்கி விடவேண்டும். பின்னர் அதே வாணலியில் எண்ணை விட்டு மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும். பின்னர் மிக்சியில் வேர்க்கடலையோடு சேர்த்துப் பொடித்து ஒரு ப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். சூடான சாதத்தில் நெய் விட்டு இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. |
கொள்ளு பருப்பு பொடி செய்வது எப்படி?
கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்று சொல்வார்கள். உடல் இளைப்பதற்கு கொள்ளு உண்பது மிகவும் நல்லது. எந்த வித பக்க விளைவும் இல்லாமல் உடம்பை இளைக்க வைப்பது கொள்ளு ஒன்று தான். சரி கொள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போமா? தேவையான பொருட்கள்: கொள்ளு - 1 கப் மிளகாய் வற்றல் - 5 - 10 ((கொள்ளு அளவிற்கேற்றவாறு) பெருங்காயம் - ஒரு சிறு துண்டு (கட்டியாக இருந்தால்) உப்பு - தேவைக்கேற்ப உப்பை தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒவ்வொன்றாக வாணலியில் எண்ணை விடாமல் வறுத்துக்கொள்ளவும். பின்னர் நன்கு ஆறியவுடன் உப்பையும் சேர்த்து வைத்து மிக்சியில் பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து உபயோகிக்கலாம். நல்ல சூடான சதத்தில் நெய்யோ நல்லெண்ணையோ விட்டு இந்த பொடியை தேவையான அளவு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உடம்பில் தேவையற்ற கொழுப்பு குறைந்து அழகும் கூடும். |
குழம்பு பொடி
தனியா - இரண்டரை கப் துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - ஒவ்வொன்றும் அரை கப் மிளகாய் வற்றல் - (குண்டு மிளகாய் வற்றல் - நான்கு கப், ஒல்லி மிளகாய் வற்றல் ஆறு அல்லது ஏழு கப்) வெந்தயம் - கால் கப் ஜீரகம் - கால் கப் கட்டி பெருங்காயம் - சிறிதளவு எல்லா பொருட்களையும் தனி தனியாக வறுத்து நல்ல நைசாக அரைத்து வைத்து கொள்ளவும். இந்த பொடியை கறி, வற்றல் குழம்பு, பருப்பு குழம்பு எல்லா வற்றிற்கும் உபயோகப் படுத்தலாம் |
ரச பொடி
இந்த முறையிலான ரசபொடி, என்னுடைய அம்மா சொல்லி குடுத்து. அவர்கள் பல வருடமாக இந்த முறையில் பொடி செய்து தயாரிக்கும் ரசம், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். தனியா - மூன்று கப் துவரம் பருப்பு - ஒன்னே முக்கால் கப் மிளகாய் வற்றல் - ஒன்றரை கப் மிளகு - ஒரு கப் சீரகம் - முக்கால் கப் பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி சிறிது மஞ்சள் பொடி (மிளகாய் வற்றல் ஒல்லியாக இருந்தால் மூன்று கப் போட்டு கொள்ளலாம்) மஞ்சள் பொடியை தவிர மாற்ற அனைத்தையும் தனி தனியாக கருகாமல் பச்சை வாசனை போக வறுத்து எடுத்து ஒன்றாக மிக்சியில் நைசாக அரைக்கவும். |
காரட் அல்வா - மைக்ரோவேவ்
துருவிய காரட் - இரண்டு கப் பால் - ஒன்றரை கப் சர்க்கரை - ஒரு கப் வறுத்த முந்திரி - இரண்டு ஸ்பூன் நெய் - இரண்டு ஸ்பூன் காரட் பால் இரண்டையும், ஆழமான மைக்ரோவேவ் பத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி விடவும். இரண்டும் சேர்ந்து அரை பாத்திர அளவே இருக்க வேண்டும். அதனால் நல்ல ஆழமான பத்திரமாக எடுத்து கொள்ளவும். மைக்ரோ ஹையில் எட்டு நிமிடங்கள் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் ஸ்டாண்டிங் டைம் குடுத்து வெளியில் எடுக்கவும். அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் எட்டு நிமிடம் வைக்கவும். மூன்று நிமிடம் ஸ்டாண்டிங் டைம் குடுத்து பின்னர் அதில் நெய், முந்திரி, ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வைக்கவும். இதை சூடாகும் சாபிடலாம், சில் என சாபிடாலும் நன்றாக இருக்கும். |
இரண்டு பேருக்கு தேவையானவை
இன்றைய கால கட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் தனியாக இருக்கின்றனர். வெளியில் வாங்கி சாப்பிட தேவை இல்லாமல் அவர்களே சமைத்து சாப்பிட சில எளிய குறிப்புகள் கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து அளவுகளும் இருவருக்கான அளவுகள். இதை கூட்டியோ குரியிதோ உபயோக படுத்தலாம் சாதம்: இரண்டரை கப் பருப்பு - ரசம் மட்டும் வைக்க அரை கப், சாம்பார் வைப்பதாக இருந்தால் ஒன்னேகால் கப் இட்லிக்கு : மிக்சியில் அரைப்பதாக இருந்தால் ஒரு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு கிரைண்டரில் அரைப்பதாக இருந்தால் ஒன்றரை கப் புழுங்கல் அரிசிக்கு முக்கால் கப் குண்டு உளுத்தம் பருப்பு தோசைக்கு : இரண்டு கப் புழுங்கல் அரிசிக்கு அரை கப் குண்டு உளுத்தம் பருப்பு இட்லி அல்லது தோசைக்கு அரைக்கும் போது உளுந்தை முதலில் அரைத்து விட்டு பின்னர் அரிசியை அரிது உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும். இட்லி தோசைக்கு சேர்த்து அரைக்க வேண்டும் எனில் மேலே கூறியுள்ள படி இட்ல்ய்க்கான அளவு போட்டு, அரிசியை நன்கு நைசாக அரைக்க வேண்டும். உளுந்து மாவு நன்கு திரண்டு பந்து போல் வர வேண்டும். மேலே குறிபிட்டுள்ள அளவிற்கு, உளுத்தம் மாவு அந்த மாதிரி திரண்டு வர முப்பது நிமிடங்கள் ஆகும். மிக்சியில் அறைபதாக இருந்தால் கையால் தொட்டு பார்த்து பார்த்து அரைக்கவும். அதிகமாக உளுந்து போட்டு தண்ணீர் விடாமல் அரைக்க வேண்டாம். |
மாம்பழ மில்க் ஷேக்
நன்கு பழுத்த மாம்பழம் - இரண்டு (நல்ல விழுதாக அரைத்து கொள்ளவும்) பால் - ஒரு லிட்டர் (முக்கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்) சர்க்கரை - எட்டு டேபிள் ஸ்பூன் ஐஸ் கியூப்ஸ் - தேவையான அளவு பாலை நன்றாக ஆற விடவும். பாதி அளவு மாம்பழ சாறு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்னர் அதில் பாக்கி உள்ளவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கலக்கி, சில் என்று பரிமாறவும் |
சப்போட்டா மில்க் ஷேக்
இரண்டு டம்ளர் மில்க் ஷேக் செய்ய தேவையானவை: சப்போட்டா நான்கு நறுக்கியது பால் அரை லிட்டர் சர்க்கரை தேவையான அளவு ஐஸ் கியூப்ஸ் ஆறு பாதி அளவு பால் எடுத்து சப்போட்டவுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும். நன்கு விழுதானவுடன், மீதமிருக்கும் பால் சர்க்கரை சேர்த்து திரும்பவும் அரைக்கவும். பின்னர் அதில் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து பரிமாறவும் |
அப்பள சமோசா
லிஜ்ஜட் பப்பட் அப்பளமாக இருந்தால் சுவையாக இருக்கும். சீராக அப்பளமோ, பூண்டு அப்பளமோ இருந்தால் அதை எடுத்து கொள்ளலாம். அப்பளம் - தேவையான அளவு உருளை கிழங்கு - பெரியது நான்கு இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப் எண்ணை - தேவையான அளவு உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உப்பு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அப்பளத்தை தண்ணீரில் முக்கி எடுத்து, அதன் மேல் கலவையில் வெய்து பிடித்த வடிவத்தில் மடித்து பொறித்து எடுத்து கொள்ளலாம். இதில் பனீர் கலவையை வெய்த்து கூட செய்யலாம் |
1-10 of 40